Wednesday, February 2, 2011

Enthan Eeramaana Pozhuthugalin Marakkamudiyaatha Pozhuthil Iraivanukku Naan Ezhuthiya Kenjal Kavithai!

    


அன்றைய இரவின் அரைநிமிடப் பொழுது!

ஆயிரம் சூரியன்கள்
ஒருசேர உதித்தார்போன்றதொரு
வெளிச்சம்
என் மனதிற்குள்ளாக...

ஆம் -
என் அன்னை வீடு திரும்பினாள்.

யமன் வாயிலிலிருந்து
எள்ளை மீட்டதைப் போன்றதொரு
தற்காலிக மகிழ்வு எனக்குள்ளாக...

என் அருமை நண்பர்களது
பிரார்த்தனையின் பலனாக
என் அன்னை
மருத்துவமனையிலிருந்து
உயிருடன் வீடு திரும்பினாள்.

ஒரு ஜான் வயிற்றுக்காகத்தான்
நம் வாழ்வின் போராட்டமே...
என்றாலும் கூட -
ஒரு துளி நேர
உயிர்குமிழியின் போராட்டம்
நம் வாழ்வை நிலைகுளைத்துவிடும்
என்பது நிதர்சனம்.

இமைக்குள்ளாக
அவ்வப்போது அசைந்துக் காட்டும்
அவளது கண்பாவைகள்...

எதனால் என்று தெரியாத நிலையில்
பதட்டப் பட்டபடி
எப்போதாவது திறந்து பார்க்கும்
அவளது விழிகள்...

அமைதியே உருவான
அவளது இடதுபுற உடம்பின் நிலை...

அவளே அறியாத நிலையில்
சுழன்று காட்டும்
அவளது வலது கரம்...
அந்த சுழற்சியின் சூழ்ச்சியால்
உருவான காயங்கள்...

நானும் இருக்கிறேன் என்று
அவ்வப்போது லேசாக அசையும்
அவளது வலது கால்...

பெருமுயற்சிஎடுத்து இழுத்துவிடப்படும்
அவளது பெருமூச்சினால் அசையும்
அவளது ஒரு ஜான் வயிறு...

மிக லேசாக சப்திக்கும்
அவளது இதத் துடிப்பு...

உள்வாங்கிய மூச்சினை வெளிவிட
துடித்தபடி உதவிசெய்ய எத்தனிக்கும்
அவளது உதடுகள்...

என்னை இவ்வுலகுக்கு ஈன்ற
மிகவும் பிரம்மாண்டமாய்
என்னால் இன்று உணரப்படும்
அவளது கருப்பையைச் சுமந்த
அடிவயிறு...

காலன்தன் கனவை நனவாக்க
பெருந்துடிப்பு துடித்தபோதும்கூட
இன்றைய பொழுதிலும் எனக்காக
ஜீவனை நிறுத்தி வைத்துக்கொள்ள
அவனிடமிருந்து சற்றே மீண்டுநிற்கும்
அவளது உயிர்...

இதனோடு கூட -
இத்துணை நாட்கள்
இத்துணை விஷயங்களை
ரசிக்கத்தேரியாமல்
நிவாடிகளை வீணடித்த என்னை
எனக்கே பிடிக்காத
அன்றைய இரவின் அரைநிமிடப் பொழுது...!

இதனின் ஈரம்
என்றென்றும் என்னுள்
மாறாத வாசனையோடு
சோகக் காற்றை வீசிக்கொண்டிருக்கும்!

எங்கேயோ இருந்துகொண்டு
என்பொருட்டு
எத்தனையோ ஈர நெஞ்சங்கள்
உருக்கித்தரும் பிரார்த்தனை எண்ணங்களைப்
பெற்றுக்கொண்டு
இன்னமும் என்மேல்
இறக்கம் காட்டிவரும் என் இறைவா...
இறங்கி ஓடி வா!

எனக்கும்
எந்தன் தொப்புல்கொடிக்கும்
உண்டான இந்த
அபரிமிதமான சொந்தத்தை
எனக்கும்
இன்னும் கொஞ்ச வருடங்கள்
இருக்கத் தா!

பவதி பிக்ஷாந்தேகி!  

- கிருஷ் சுரேஷ் (17.09.2010)

2 comments:

  1. Hi Suresh... I have no words to express.. its just shook me off.. beautiful.. what a way to pay tribute to the mother earth.. really me at a loss of words.. or cannot be described for its beyond measure & description.. Hats off to you .. and me had few opportunities to speak to your great Mom on few occassions.. she is truly a great personality.. love her a lot for what she is.. I dont want to use the word 'was'..for I feel she is still present in this world.. I agree there is no substitute for mother's love.. and no one can give that .. its beyond par.. and matchless..
    பவதி பிக்ஷாந்தேகி

    ReplyDelete
  2. Hi Suresh

    Last time .. I just breezed in and out to see my ailing mom & dad... and it was an official visit for 2 days..thank god , he gave me an opportunity to meet my parents .. and there was a marriage in Usha's family .. and I attended the same ..and checked out to Doha.. apologise for not calling.. though Usha had updated and posted me the visit to children's home , and the valuable glorious moment she spent there with all of you along with the God's sent children.. love it Man.. you did a great job.. its a matter of pride.
    by the way.. I brought a small gift to your little master Prithivi .. and that could not be given to him during my visit.. I did tell Usha that I might again visit in this month while going to my Mumbai office , thought that I would call you , meet Prithivi , and hand over the same to him in person.. but I dont think that this month I shall make it for the trip has been postponed.. so please do advise Usha as to how to see that this gift for Prithivi reaches him .. thanks a lot for your lovely 'kavidhais' on my photos and on my family.. its really nice .. I peeked in today in and found lot of good stuffs posted by you.. which really made me so happy and soothing to my mind.. thanks a lot once again .
    best regards
    G.Sridhar
    Doha
    +974 55178945
    email. harsha9992@gmail.com

    ReplyDelete