Saturday, September 24, 2011

praarthanai seivome...

makkal tv-in mazhalai sagotharikkaaga...

nanbanin nizharpadam....

mazhalain sirippil...

marakka marantha ninaivalaigal...

makkal tv-in mazhalai sagotharikkaaga...

oviyam potruthum...

nalluravin varavukkai....

Nizharpadathirkaai...

Sinekitham Sirakkum...

Sonthathin Sumaiyil...

Monday, September 19, 2011

azhago azhagu...

praarthanai...

ninaivugal...

anbin ragaisiyam...

suthanthira sogam...

rasanai...

thaniyaatha thaagam...

pizhaippu...

saalarappennaal jaakirathai...

odakkaraiyum.. kanmanik kanavum...

raaja veethi...

praarthanai...

Patchai Vayalum Pasumai Ninaivum...

Monday, February 14, 2011


Homa Agniyil Hanuman Thiruvuruvam....!  Oru Silaper ithanai Shirdi Sai Baba endrum Ennalaam...!
Indru engal office-il nadaipetra Homathin oru Photo pirathi ithu!
Praise the Lord!

Wednesday, February 2, 2011


நானுணர்ந்தத்  தாய்மையெனும் தவசி...
என் அன்னை சானு !

இரண்டெழுத்தில் ஓர் உலகம்!
தன் தாயை இருக்கப் பிடித்துத்தவழும்
தளிர் பிள்ளையை  விடவும் கூட
ஒருபிடி சுகம்
அதிகம் எழும் என்மனதிற்குள்ளாக -
அவளை நினைத்தமாத்திரத்தில்...!

எழுதும் தமிழில் சுகமளிக்க எழுதவில்லை இதனை!
எனக்குள்ளாக...எனக்கு மட்டுமாய்
எத்தனையோ முறை
இச்சுகம் கண்டு பூரித்தவன் நான்!

மகரந்த மழையில்
நனைந்த வண்டென
மயக்க நிலையில் நான்
உறக்கம் கலைந்ததும்
கலையாத கனவு போல்
இன்றும் கூடச் சில நினைவுகள்...!

எத்தனை முறை வாசித்தாலும்
முடிவதையும் இல்லை
திகட்டுவதாயும் இல்லை...!
சிணுங்கும்
இந்த இருசொல் கவிதைக்கு  
முடிவில்லாக் கவிதையின்
முற்றுப்புள்ளியா
அந்த அழகு நெற்றியில் கறுப்புப் போட்டு...?

தேவதைகள் மண்ணில் பிறப்பதில்லையாம்...!
ஆனால்  நானோ
தேவதைக்கே பிறந்தவன்!

என் கவிதைத் தாயவள்
கொஞ்சும்போதும்
கெஞ்சும்போதும்
எப்போதும் அழகு!
தள்ளிப்போடா என்று சினுங்கும்போதோ
பேரழகு!

இலையில் வழியும் ஒரு துளியில்
விரல் நனைக்க
மனம் நனையும் அந்த
அதிகாலை வேளையில் கூட
அவள் மடியில் தலைசாய்த்து
நானுறங்கிய நல்பொழுதுகள்...!

பத்துத் திங்கள்
பாரமாய் எனைச் சுமந்து
இவ்வுலகில் நான் உதிர்த்த  
முதற்சிரிப்பைக் கண்டவுடன்
தான் பெற்ற இன்னல்களை
என் கண்களில் மறைத்த
உன்னத உறவு அவள்!

உதிரத்தை உணவாக்கி
மனமகிழ எனக்களித்து
என் மழலைச் சொல்கேட்டு
தன் துயரம் தான் மறந்தத் 
தன்மையான பேருறவு அவள்!

நானுறங்கும்  வேளையிலே
எனைத் தாலாட்டித் தொட்டிலிட்டு
தன்னுறக்கம் தான் மறந்தத்
தியாகத் திருவுவே அவள் தாய்மை!

உலகமெல்லாம் ஒன்றாகி
எனைக் குற்றம் சாட்டினாலும்
குற்றத்தின் தண்டனையாய்த்
தூக்குமேடை ஏற்றினாலும்
ஒரு உள்ளம் வாதாடும்...
எனக்காகப் போராடும்...
அது தாய்மையெனும் அவள் திரு உள்ளம்!

என் தாயை எனைவிட்டுப் பிரித்த
தன்னிகரில்லாத இறைவன்  கூடத்
தாய்மை எனும்  திருவுளத்தைத்
தரணியை விட்டுப்  பிரிக்கமுடியாது...!

பார் முழுவதும்
பாவங்கள் பெருகினாலும்
பூமி பிழைத்திருக்கும்...
காரணம் என்னவென்றால் -
தாய்மை தழைத்து இருப்பதினால்!

தாயும் தமிழும் ஒன்றே
என்பார் தாரணி போற்றும்
திருப்புலவர் திருவள்ளுவர்!
தமிழ் கொண்டு என்தாயைப்
போற்றவேண்டியவனை
செந்தமிழ் கொண்டு அவள்பிரிவைப்
பாட வைத்தானே நல்லிறைவன்...!

கட்டிலில் கிடந்தாளை
கண் எனைப் பெற்றாளை
கண்ணிய மனத்தாளை
காலன்பின் சென்றாளை
கண்ணாடிப் பெட்டியில் புகுந்தாளை
கண்ணயரும் நேரத்தில் என்
கரம்கொண்டுக் காலனுக்குக்
கட்டியம் வைத்தேனே!

பெற்றெடுத்த பேழைகள்
சுற்றிநின்று கதறியழ 
பெரியோர் சிறியோர் எனச்
சுற்றமும் சூழ்ந்து நிற்க 
பெருமகனாம் எந்தன்
ஆருயிரைத் தந்தாளைப்
பெயர் சேர்த்துப்போற்றிப் பின்னே
வழியனுப்பி வைத்தேனே!

என்ன தவம் செய்தேனோ
இப்பிறப்பில் அவள் பொருந்தி
இன்னதெனச் செய்வது
அறியாது விழிபிதுங்கி
பந்தமும் சூழ்ந்துநிற்கப்
பந்தமுனைத் தீக் கொண்டு
பரதேசம் போவேன நான்
வழியனுப்பி வைத்தேனே!

இன்னபிற நாட்களில் நான்
தனியேன் எனத்  தானேகித்
தத்தளிக்கும் பொழுதுகளைச்
சந்தம் பாடி சப்தமிடத்
தமிழ்கொண்டு நானெழுதும்
விரலின் நுணி வாசமிதைத்
தந்து நிலைபுரியவைக்கத்
தமிழறிய வைத்தேனே!

தவிப்பேனே...!
தனி நிலையால் துடிப்பேனே...!
சிரியேனே...!
சுகமான சுமையதனைச்
சுற்றி வளர்ந்தேனே...!
சுற்றத்தில் பெருஞ்சூரியனைச்
சுகமளித்தத் தாயவளைத் தந்தேனே...!
சுட்ட தீச் சுனைஎடுத்துப் பின் கரைத்தேனே...!
கை பிரிந்தேனே!

மனம் தளர்ந்துப் போனாலும்
என்
விரல் தளரவில்லை...!
என் விரல் நுணி வாசம் மட்டும்
இனி என்றென்றும்
தொடர்ந்து கொண்டே இருக்கும்!

என் தாயை வாழ்த்த உதவிய தமிழே!
நீ வாழ்க! வாழ்க!
தாரணி உள்ளவரை நின் தாள்வணங்க
எம் தமிழர் என்றென்றும் வாழ்க!
நான் எனக்குள்ளாக ரசித்த பொழுதுகள்...


அது ஒரு அழகான அந்திப் பொழுது...!

ஆதவன் சுட்ட வடு
மறையும் முன்பாக
என் அன்னைக்கட்டிய தூளியின் ஆதாரத்தை
அக்கினிக்கு அள்ளித்தந்த அவதிப் பொழுது...!

என் அருமை அன்பான தந்தை
எள்ளின் சுவையை சுவைக்கவேண்டி
எருமை வேந்தனுக்கு இரையான
எல்லையில்லாச் சோகப் பொழுது...!

கட்டிளம் காளையாய்
களத்தில் களியாட்டம் ஆடிய என்னை
காரிருள் விதி கண்மளங்கக்
கட்டிவைத்து கும்மாளமிட்ட கடைசீப் பொழுது...!

அழகு அண்ணனின் கரம்பற்றி
அன்னையை என் நெஞ்சிருத்தி
அடுத்தேன்னச் செயியப் புரியாது கலங்கிய
அச்சம் தலைகொண்ட அறியாத பொழுது...!

சுற்றி பல பெரிருந்தும்...
சுற்றம் பல பேசியிருந்தும்...
சிற்றம்பலவாசன் சிநேகம் மட்டுமே
சின்ன நெஞ்சில் சிறைகொண்டதால்...
சுழலதும் வாழ்க்கைச் சுழல் தட்டு என
சுழற்றிய சட்டையை தூர எறிந்துவிட்டுத்
தொடங்கியது என் சுமையான சுதந்திர வாழ்வு!

வயிற்ருக்குக் கஞ்சியா...
தொப்புளுக்குக் கஞ்சியா என
புரியாத நாட்களில் கூட
கோப்பைக் கஞ்சிக்கும் வழியின்றி
வாசலில் தோன்றிய வஞ்சப்புகழ்ச்சிக்கு
வர்ணஜாலம் காட்டி வந்த வறுமைப் பொழுது...!

கண்டேன் சீதையை என
அனுமன் சொன்ன ராமனைப்
போலல்ல என் பொழுது -
கண்டுகொண்டேன் சீதையை என
ராமன் சொன்னதார்போன்றதொரு
விசித்திரமான பொழுது அந்தப் பொழுது...!

விட்டில் பூச்சிக்கு
விளக்குக் கிடைத்த
சந்தோஷத்தை விடவும் கூட
ஒரு பங்கு அதிகம் தான் -
ஆம் -
பெற்றெடுத்தாள் என் பத்தினி
பிரதீபா என்றொரு பேழையை எனக்காக!

பொழுது புலர்ந்ததாம்...
கூடவே அடைமழை சிலிர்த்ததாம்...
புலர்ந்த பொழுதினைப் பார்த்து
பிடிமனளுக்கும் கூட பிணக்கு வந்ததாம்
என்பதைப் போல
புதிய உறவு என் வீட்டினுள் புகுந்த பொழுது
வீட்டினுள் நின்ற நான்
வழுக்கியபடி வந்து
வீதியில் நின்ற வேண்டாதப் பொழுது...!

காடு...மலை...கரடுமுரடான பாதைகள்...
கண்ட இடமெல்லாம்
கல்லுக்கும் முள்ளுக்கும் கைகலப்பு -
என்னை யார் முதலில் குத்துவதென்று...!

வலிக்கும் வேதனைக்கும் இடையிலே
சில நேரங்களில் சுகமான சுமைகள்...

நிலைபுரியாத மனத்தோடும்
விடை தெரியாத வாழ்க்கைக் கேள்விகளும்
நிறம், தரம், நிரந்தரமாகாத நிலையிலும் தான்
என்னவன் முன்பாக எந்தன்
காரியக் கிரஹபிரவேசம்...!

முத்துமுத்தான குருமீசையும்
முன்பக்கம் அதிகம் சிதரவிடப்பட்ட கேசமும்
தீர்க்கமானப் பார்வையும்
தெளிந்த தெளிவானப் பேச்சும்...
உயரமானவனாய்... மனத்தில் மிகவும் உயரமானவனாய்
என் மனத்தில் உணர்த்திய உன்னதமானப் பொழுது...!

கழுத்துப் பட்டைக்கும் எனக்குமாக
தொடர்ந்துவந்த பந்தம் கூட
முறிந்து போன பொழுதும் அதுதான்!

எழுதி எழுதி மரத்துப் போன
என் விரல்களுக்கு இன்னமும்
தணியாத தாகம்!
என்
விரல் நுணி பேனா மைக்கும் கூட!

அன்பான அவனது சிநேகம்
என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள்...
இடையில் கடந்து வந்த
மரத்தும், மறக்கமுடியாதக் காயப் பொழுதுகள்...!

அத்தனையையும் மீறியும்
நானுமரியாமல் வளர்ந்துவந்த
என்
வாழ்க்கைப் பொழுதுகள்...!

கடந்துவந்தக் காலப் பொழுதுகளில்
கரம் கொடுத்து நடத்திவந்த
கண்ணிய புருஷனின் தரிசனம் மட்டுமே
என்னுள் இன்னமும்
இனம்புரியாத சுகமான உணர்வுகளை
இறுக்கி பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறது!

எத்தனையோ முறை
என்னவன் முன்பாக எதிர்நின்று
எத்தனைப் பேச நினைத்தாலும்
அவனது காந்தக் கண்கள் தவழவிடும்
குளிர்ந்ததொறுப் பார்வை போதுமே...
என் சுவாசத்தைப் பிசைந்துவிட்டு
என் அன்னைத் தந்த கொரோசனைக்கு
வேலையின்றிச் செய்துவிட்டு
வெறும் காற்றுகூடத்
தொண்டைக்குள்ளிருந்து வெளிவர மறுக்கும்
சுகமான சுமைப் பொழுது...!

இடையிடையே சில சொந்தங்கள்
காலனின் கயிற்ருக்கு இரையாகிப் போய்...
அந்தச் சொந்தங்கள் சேர்த்துத்தந்த
சுமைகளில் ஒன்றிரண்டு கூட செல்லரித்துப் போய்...

என் நெஞ்சமெனும் தூளியிலே
துயில்கொண்டு கூடி நின்ற
சுகமானச் சொந்தங்களில் சில
விட்டுச் சென்ற வாசம் மட்டுமே
என்னுள் இன்னமும் காயாமல்...

தம்பியுடையான் படைக்கஞ்சான்
என்று சொல்லிவிட்டு
அடுத்த நாள் சூரியனுக்குக் கூடச் சொல்லாமல்
அயர்ந்தத் தூக்கத்தில்
அடங்கிப் போனான் என் அண்ணன்!

பெற்றவளுக்கு என்னை மணமுடித்து...
பெற்றவளைப் போல் எனை வளர்த்து...
நான் பெற்றவளை பேணி நின்ற
பெருமனத்தால் - எந்தன்
மனமுகந்த மனைவியின் அன்னை...!

இப்படியாகப் பற்பலச் சொந்தங்கள்
விட்டுச் சென்ற வாசங்களுக்கிடையே
தன் சுமையை என்தோளில் இறக்கிவிட்டு
நான் தவிப்பதைக் கூடத்
தரம் பார்த்து விடைகேட்கும்
செல்லரித்துப் போனச் சொந்த மனிதர்களை
இனம் காட்டிய இருக்கமானப் பொழுதுகள்...!

இவைமட்டும் போதாதென்று
நினைத்தானோ என் நல்லுள்ளம்கொண்ட இறைவன்...?

துன்பப்பட்டது போதாதென்று
தயங்காத் தாய்மையாம்  
என் அன்னையைகூட
எனைவிட்டு காலனின் கயிற்றுக்கு முடிபோட்டு
முற்றிப் புள்ளி வைத்துவிட்டான்...!

நானுரங்கத் தாலாட்டு பைடியவள்
மீலாத் துயிலில் மரத்துபோக
அவன்தாள் பணியச் செய்துவிட்டான்...!

சொந்தமேங்கே... பந்தமேங்கே...
ஒண்டிக்கொண்ட கூடும் போனதுமேங்கே...
வீதி மட்டுமே சொந்தமானதே...
காடு வழி போன தூரமேங்கே...

கடவுளுக்குத் தான்
எத்தனைக் கண்கள்...
ஒவ்வொரு கல்லாக வீசியவன்...
இன்று ஒரே நேரத்தில்
பற்பல கற்களை வீசிவிட்டு
கண்சிமிட்டக் கூட நேரமின்றி
காணாது கான்கிரானே...!
கலத்தில் எனைமட்டும் தனியாக நிறுத்திவிட்டு!

இருந்தும் கூட
எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்...!

என் அன்புத் தோழா!
விரல் நுணி வாசத்துச் சொந்தக்காரா!

இறைவன் எழுதிய கவிதை
மனிதன் வாழும் வாழ்க்கை,
வாழ்வின் இலக்கணங்களை மட்டுமே
அவன் எழுதியனுப்புகிறான்
இலக்குகளை நாம் தான்
தேடிக்கொள்கிறோம்...தேடிக்கொண்டிருக்கிறோம்...
நாம் தேடிக்கொள்ளும் இலக்கு
இனிப்புச் சுவைச் சொட்டும்
தேனாக இருக்கட்டும்...
வலிக்கக் கொட்டித்
துடிக்கச் செய்யும்
தேளாக இருக்கவேண்டாம்!

எங்கேயோ இருந்துகொண்டு
எனை வாட்டும்
என் பெருமதிப்புக்குரிய இறைவா...!
நின்று சொல்வேன் நான்!
கேள்!
என்னோடு நீயும் நிற்கின்றாய்...
மறவாதே!

நெற்றியின் வியர்வையை
நிலத்தினில் விதைக்க
நெல்மணி உண்டாகும்!
ஆயினும் -
அதைப் பற்றியத் தாள்களின்
முற்றிய விரல்களில் தான்
பாரதம் பொன்னாகும்!

நீ தரும் பாரம்கொண்டு
எனைத் தீண்டினாலும் கூட
நெஞ்சார நிமிர்ந்து நின்று
நான் சொல்வேன் என் அன்பு இறைவா!

விளக்கித் தீண்டவே
நால்போழுதை வீணடிக்கும்
விட்டில் பூச்சியல்ல நான்!

நெடுநாளாய்
சிற்பியின் சிதைப்புக்கு
இடம் தந்தாலும்
இறுதியில்
பிறர் போற்றி பண்பாடும்
இறைச்சிலையா மாறும்
நிறை கல் நான்!



Enthan Eeramaana Pozhuthugalin Marakkamudiyaatha Pozhuthil Iraivanukku Naan Ezhuthiya Kenjal Kavithai!

    


அன்றைய இரவின் அரைநிமிடப் பொழுது!

ஆயிரம் சூரியன்கள்
ஒருசேர உதித்தார்போன்றதொரு
வெளிச்சம்
என் மனதிற்குள்ளாக...

ஆம் -
என் அன்னை வீடு திரும்பினாள்.

யமன் வாயிலிலிருந்து
எள்ளை மீட்டதைப் போன்றதொரு
தற்காலிக மகிழ்வு எனக்குள்ளாக...

என் அருமை நண்பர்களது
பிரார்த்தனையின் பலனாக
என் அன்னை
மருத்துவமனையிலிருந்து
உயிருடன் வீடு திரும்பினாள்.

ஒரு ஜான் வயிற்றுக்காகத்தான்
நம் வாழ்வின் போராட்டமே...
என்றாலும் கூட -
ஒரு துளி நேர
உயிர்குமிழியின் போராட்டம்
நம் வாழ்வை நிலைகுளைத்துவிடும்
என்பது நிதர்சனம்.

இமைக்குள்ளாக
அவ்வப்போது அசைந்துக் காட்டும்
அவளது கண்பாவைகள்...

எதனால் என்று தெரியாத நிலையில்
பதட்டப் பட்டபடி
எப்போதாவது திறந்து பார்க்கும்
அவளது விழிகள்...

அமைதியே உருவான
அவளது இடதுபுற உடம்பின் நிலை...

அவளே அறியாத நிலையில்
சுழன்று காட்டும்
அவளது வலது கரம்...
அந்த சுழற்சியின் சூழ்ச்சியால்
உருவான காயங்கள்...

நானும் இருக்கிறேன் என்று
அவ்வப்போது லேசாக அசையும்
அவளது வலது கால்...

பெருமுயற்சிஎடுத்து இழுத்துவிடப்படும்
அவளது பெருமூச்சினால் அசையும்
அவளது ஒரு ஜான் வயிறு...

மிக லேசாக சப்திக்கும்
அவளது இதத் துடிப்பு...

உள்வாங்கிய மூச்சினை வெளிவிட
துடித்தபடி உதவிசெய்ய எத்தனிக்கும்
அவளது உதடுகள்...

என்னை இவ்வுலகுக்கு ஈன்ற
மிகவும் பிரம்மாண்டமாய்
என்னால் இன்று உணரப்படும்
அவளது கருப்பையைச் சுமந்த
அடிவயிறு...

காலன்தன் கனவை நனவாக்க
பெருந்துடிப்பு துடித்தபோதும்கூட
இன்றைய பொழுதிலும் எனக்காக
ஜீவனை நிறுத்தி வைத்துக்கொள்ள
அவனிடமிருந்து சற்றே மீண்டுநிற்கும்
அவளது உயிர்...

இதனோடு கூட -
இத்துணை நாட்கள்
இத்துணை விஷயங்களை
ரசிக்கத்தேரியாமல்
நிவாடிகளை வீணடித்த என்னை
எனக்கே பிடிக்காத
அன்றைய இரவின் அரைநிமிடப் பொழுது...!

இதனின் ஈரம்
என்றென்றும் என்னுள்
மாறாத வாசனையோடு
சோகக் காற்றை வீசிக்கொண்டிருக்கும்!

எங்கேயோ இருந்துகொண்டு
என்பொருட்டு
எத்தனையோ ஈர நெஞ்சங்கள்
உருக்கித்தரும் பிரார்த்தனை எண்ணங்களைப்
பெற்றுக்கொண்டு
இன்னமும் என்மேல்
இறக்கம் காட்டிவரும் என் இறைவா...
இறங்கி ஓடி வா!

எனக்கும்
எந்தன் தொப்புல்கொடிக்கும்
உண்டான இந்த
அபரிமிதமான சொந்தத்தை
எனக்கும்
இன்னும் கொஞ்ச வருடங்கள்
இருக்கத் தா!

பவதி பிக்ஷாந்தேகி!  

- கிருஷ் சுரேஷ் (17.09.2010)

Tuesday, February 1, 2011

ƒÉ¢òÐ À¢¡¢ó¾ µ÷ ¯È×

பேசும் படம் புத்தகத்தில்
நடிகை ஸ்ரீவித்யா
அட்டைப்படக் கதாநாயகியாய்
விஸ்தரித்த காலத்திலிருந்து
நேற்றைய ஞாயிறு வரை
ஜனித்து பிரிந்த ஓர் உறவைப் பற்றிய
என் விரலின் நுனி வாசம் இது !
 
வசந்தன் -
பெயருக்கேற்ற பிறப்பு.
சின்னஞ்சிறு வயதில்
தந்தையெனும் உலகைப் பிரிந்து
தாயேனும் தெய்வத்தின் கருணையில்
தன்னுயிரைத் தனதாக்கிக் கொண்ட
தவறாத பிள்ளை அவன்.
 
எலிமெண்ட்ரி ஸ்கூலின் வாசலில்
விற்ற வாசனையில்லாத குச்சி ஐஸ்க்ரீமைச்
சுவைத்து வளர்ந்த நாட்கள் முதலாய் எனக்குத் தெரிந்த வரையில்
தீயது எதனையும் தீண்டாத
வாசமானவன் என் வசந்தன்.
 
சென்ற ஞாயிறின் சுட்டப் பொழுதில்
செந்தீக்கொண்டு சுட்டெரிக்கப் படும்வரையில்
சுகந்தமான வாசமுடன் வேதாளை வயசைவிட்டு விவரமான வாழ்க்கைக்கு
விலாசத்தை விவரிக்க வேண்டி
வனிதா - வுடன் தன்னைச் சேர்த்துக்கொள்ள
நிச்சயிக்கப் படவேண்டியவனை
சுட்டதீச் சுனைக்கொண்டு
கரைத்துவிட்ட கதைசொல்ல
என் விரலின் நுணி வாசம்கொண்டு
என் மணவறையின் காயத்திற்கு
மருந்து போடா முயன்றுகொண்டிருக்கிறேன் நான்...!

 
நல்லமனம் படைத்த நல்நண்பா!
நீ எங்கிருந்தாலும் உனைனியா ஒருபொழுதும்
என்வசம் இல்லை!
Tsunami enum Kadalarakki En kuzhanthaigalidam Mannippu Kettaal....?

Kanchi Devanukkai En Idayathullirunthu oru Gaanam...

Monday, January 31, 2011